இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
பாலக்காட்டைச் சேர்ந்த 2 பேர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூன்று பேர், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த இரண்டு பேர், இடுக்கி மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கேரளா வந்தவர்கள் என்றும் அவர் கூறினார். மேலும், இதில் ஆறு பேர் குணமடைந்துள்ளதாகவும் 112 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.