தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியவர் கைது! - crime news

புதுச்சேரி: வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடியவரை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சிசிடிவி
சிசிடிவி

By

Published : Aug 2, 2020, 8:00 PM IST

புதுச்சேரி வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ரெஜினாபேகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை தொடர்பாக கடந்த மே மாதம் டெல்லி சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர், கடந்த ஜூலை 21ஆம் தேதி ரெஜினாபேகம் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள், வெள்ளி பொருள்களை திருடியுள்ளார்.

அப்போது பூட்டிய வீட்டின் உள்ளே சத்தம் கேட்டதால் குடியிருப்பு காவலாளி சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்து யாரோ ஒருவர் ஓடி உள்ளார். இது குறித்து காவலாளி பெரியகடை காவல் நிலையத்திற்கும், டெல்லியில் இருந்த வீட்டின் உரிமையாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலையடுத்து ஊர் திரும்பிய வீட்டின் உரிமையாளர், பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருள்களை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளதாக புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சி

இந்த விசாரணையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைத்திருட்டில் ஈடுபட்டது சென்னையை சேர்ந்த சுரேஷ் (எ) மார்கெட் சுரேஷ் என்பதும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு திருட்டு வழக்கில் கைதாகி புழல் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார் என்பதும் தெரியவந்தது. இவர் புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கி, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் வெளிவந்தது. கைதான சுரேஷிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: 4 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details