பாகிஸ்தான் ராவல்பிண்டி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கஞ்ச் மண்டி சந்தை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் குண்டு வெடிப்பு - 25 பேர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரின் சந்தை பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடித்த பகுதி முழுவதும் மோசமாகச் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் அலுவலர்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் காவல் நிலையமும் உள்ளது. கடந்த 10 நாட்களில் காவல் நிலையம் அருகே நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். டிசம்பர் 4ஆம் தேதி இதே நகரில் பிர் வாதாய் காவல் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.