தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 25 பேர் காயம்

மும்பை: தானே மாவட்டம் ஷிரோலில் நேற்றிரவு (அக். 21) மின்னல் தாக்கியதில் ஆறு மாத குழந்தை உள்பட 25 பேர் காயமடைந்தனர்.

25 injured in lightning strike in Maharashtra's Thane
25 injured in lightning strike in Maharashtra's Thane

By

Published : Oct 22, 2020, 11:03 AM IST

மகாராஷ்டிரா மாநிலம்,தானே மாவட்டம் ஷிரோல் என்ற கிராமத்தில் நேற்றிரவு நடந்த, மின்னல் தாக்குதலில் 25 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் ஷாஹாபூர் தாலுகாவின், ஷிரோல் பஞ்சாயத்தில் நடந்தது. அங்கு இரண்டு வீடுகளில் மின்னல் தாக்கியது.

இந்தச் சம்பவத்தில் ஆறு மாத குழந்தை உள்பட 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஷாஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

கடந்த சில நாள்களாக, மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்துவருகிறது. கடந்த வாரம், புனே, அவுரங்காபாத், கொங்கன் பிரிவுகளில் கனமழை, வெள்ளத்தால் சுமார் 48 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், லட்சக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன.

இதைத்தொடர்ந்து, கட்கானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, ​​முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் அதிக மழை பெய்யும் அச்சுறுத்தல் குறைந்துவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் தன்னிடம் கூறியதாகவும், அடுத்த ஏழு முதல் எட்டு நாள்களில் மின்னல் ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details