தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நிஜாமுதீன் மாநாடு; கரோனா பாதிப்பு உள்ள 617 பேர் மருத்துவமனையில்...!' - துணை முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

டெல்லி: 36 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட இரண்டாயிரத்து 361 பேரில் கரோனா பாதிப்பு உள்ள 617 நபர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

2,361 people brought out from Markaz in 36-hour op, 617 sent to hospitals: Manish Sisodia
2,361 people brought out from Markaz in 36-hour op, 617 sent to hospitals: Manish Sisodia

By

Published : Apr 1, 2020, 2:34 PM IST

டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

இதனையடுத்து இதில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

"இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த விவரங்கள் கடந்த 36 மணி நேரத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட 2,361 பேர் கண்டறியப்பட்டு, இவர்களில் வைரஸ் தொற்று உள்ள 617 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் இரண்டாயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலரின் இருப்பிடம் தெரியவில்லை. அவர்களின் தொலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க...நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தல்

ABOUT THE AUTHOR

...view details