தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் மீட்பு - Iran corona virus Indians

டெல்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானில் சிக்கித் தவித்த 234 இந்தியர்களை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுவந்துள்ளது.

jai shankar
jai shankar

By

Published : Mar 15, 2020, 10:26 AM IST

கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடான ஈரானை மிக மோசமாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டிற்குப் புனித பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் 103 பேரும், மாணவர்கள் 131 பேரும் சிக்கிக் கொண்டனர். ஈரானில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேலாக நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 611 பேர் உயிரிழந்துள்ளனர்.

முற்றிலுமாக முடங்கிப்போன ஈரானில் சிக்கித் தவித்த 234 பேரையும் இந்திய அரசு மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நேற்று ஈரான் விரைந்த இந்திய விமானப்டை விமானம் 234 இந்தியர்களைப் பத்திரமாக மீட்டுவந்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 234 இந்தியர்கள் ஈரானிலிருந்து பத்திரமாக மீட்டுவரப்பட்டுள்ளனர். இதற்கு உதவியாக இருந்த ஈரான் நாட்டு அலுவலர்களுக்கும், ஈரானுக்கான இந்திய தூதர் தம்மு கட்டாமுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டுவர மூன்று விமானப்படை குழுக்கள் வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மருத்துவ படிப்பிற்காக 10,000 இடங்கள் அதிகரிக்கப்படும் - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details