சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) பரவத்தொடங்கியது. வைரஸ் தொற்று காரணமாக வூஹான் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால், அங்கிருந்த இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் உள்ளிட்ட 406 நபர்கள் ஏர் இந்தியா உதவியுடன் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மேற்கு டெல்லியிலுள்ள இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் முகாமில் காண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
சமீபத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.