தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமய மாநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு - உச்ச நீதிமன்றம்

டெல்லி: சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் 23 பேர் தங்களது  சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமய மாநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு
சமய மாநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு

By

Published : Jul 27, 2020, 8:56 PM IST

Updated : Jul 27, 2020, 9:12 PM IST

கரோனா ரைவஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியிருந்த ஊரடங்கின்போது, அரசின் வழிகாட்டுதல்கள், விசா விதிமுறைகளை மீறி நோய் பரப்பும் நோக்கில் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்டதாக கூறி நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், கரோனா ஊரடங்கு வழிகாட்டுதல்களை மீறி டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினரை, தடுப்புப்பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டது. மேலும், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தத் தீர்பை எதிர்த்து தங்களுக்கு தனிப்பட்ட உத்தரவுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறி 15 நாடுகளைச் சேர்ந்த 34 வெளிநாட்டினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

இதனைத்தொடர்ந்து, இந்தோனேசியா, கிர்கிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 53 பேர், பேரம் பேசும் நடவடிக்கையின் கீழ் தங்களின் தவறை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இருந்தபோதிலும், வெளிநாட்டினர்களின் விசாவை மத்திய அரசு பறித்துவைத்திருந்ததுடன், அவர்களை தடுப்பு பட்டியலில் வைத்திருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், விசா ரத்து செய்யப்பட்டு, தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினர்களை தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இன்றுவரை, 908 வெளிநாட்டவர்கள் மனுவை பேரம் பேசும் நடவடிக்கையின் கீழ் லேசான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட பின்னர் பல்வேறு அபராதங்களை செலுத்தி, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Jul 27, 2020, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details