தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 447 பேருக்கு எதிர்வினை: மத்திய அரசு - latest corona vaccine news

இந்தியாவில் மொத்தமாக 2,24,301 மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 447 பேருக்கு ஒரு விதமான பக்கவிளைவு கொண்ட எதிர்வினைகள் காணப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Union Health Ministry on COVID 19 vaccine, COVID 19 vaccine latest news, nationwide vaccination drive, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், கரோனா தடுப்பூசி பக்கவிளைவு, கொரோனா தடுப்பூசி பக்கவிளைவு, corona vaccine side effects, corona vaccination drive, latest corona vaccine news, latest covid19 vaccine news
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

By

Published : Jan 17, 2021, 10:58 PM IST

Updated : Jan 17, 2021, 11:13 PM IST

டெல்லி: இரண்டு நாட்கள் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்பட்டதைத் தொடந்து அதுகுறித்த அறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியாவில் மொத்தமாக 2,24,301 மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 447 பேருக்கு பக்கவிளைவு கொண்ட எதிர்வினைகள் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் நாளான நேற்று (ஜனவரி 16) 3 ஆயிரத்திற்கும் மேலான மையங்களில் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 553 மையங்களில் 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2,24,301 பேருக்கு இரண்டு நாட்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நார்வேயில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 பேர் உயிரிழப்பு!

முதல் நாளில் 2 லட்சத்து 07 ஆயிரத்து 229 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இது அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போடப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளது.

Last Updated : Jan 17, 2021, 11:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details