டெல்லியில் 22 ஆண்டுகால மோசமான வரலாற்றுச் சம்பவம் மீண்டும் திரும்பி உள்ளது. 1997ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வெள்ளிக் கிழமை டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள உபார் திரையரங்கில் தீ விபத்து நடந்தது.
இந்த தீ விபத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலை மேற்கு டெல்லியின் ராணி ஜான்சி சாலைப் பகுதியில் ஒரு நெரிசலான சந்தையின் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டனர். இது உபார் திரையரங்கு தீ விபத்து சோகத்திற்குப் பிறகு டெல்லியின் இரண்டாவது மிக மோசமான தீ விபத்து இது ஆகும். உபார் தளத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 27 கார்களை வெளியேற்றும் பார்க்கிங் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ மளமளவென பரவி திரையரங்கில் இருந்த 59 பேரின் உயிரை பலி வாங்கியது. இந்த தீ விபத்தானது அதிகாலை 3-6 மணிக்குள் நடந்தது. ஆனஜ் மண்டி தீ விபத்தும் அதிகாலை நடந்துள்ளது.