தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரேவ் பார்ட்டியில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்பு! - 22 women rescued from rave party in Jubilee Hills

ஹைதராபாத்: ஒருங்கிணைப்பாளர்களால் பிரபல பாரில் நடைபெற்ற ரேவ் பார்ட்டியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட 22 பெண்கள் காவல் துறையால் மீட்கப்பட்டுள்ளனர்.

காவல் துறை அதிரடி
காவல் துறை அதிரடி

By

Published : Jan 13, 2020, 3:59 PM IST

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் இயங்கும் பிரபல பாரில் சட்டவிரோதமான செயல் நடைபெறுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், ஜூபிளி ஹில்ஸ் காவல் துறையும், பஞ்சாரா ஹில்ஸ் காவல் துறையும் இணைந்து நேற்றிரவு பாரில் அதிரடி சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், 22 பெண்கள் வலுக்கட்டாயமாக ரேவ் பார்ட்டிக்கு அழைத்து வரப்பட்டடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அப்போது, பாரில் ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரேவ் பார்ட்டி

மேலும், தலைமறைவாகியுள்ள பாரின் உரிமையாளரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது, ஜூபிளி ஹில்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஐந்து வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details