டெல்லியில் போன் பறிப்பு, கடத்தல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதம் காலமாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர், தனிப்படை அமைத்து செல்போன் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
211 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல்; டெல்லியில் மாஃபியா கும்பல் கைது! - போன் பறிப்பு
டெல்லி: சர்வதேச செல்போன் கடத்தல் மாஃபியா கும்பலை இன்று கைது செய்த டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர், அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன். 1ஆம் தேதி அன்று, செல்போன்கள் திருட்டில் ஈடுப்பட்ட அந்த மாஃபியா கும்பல், டெல்லியில் இருந்து நேபாளத்திற்கு தப்பி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் விமான நிலையம் போகும் வழியில், அக்கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் நரேஷ் குமார்(30), முகேஷ் குமார்(38), ராம் சிங்(58), கோபால் பதக்(31) மற்றும் ரோஹித்(23). ஆகியோர் அந்த மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்களிடம் இருந்து 90 ஐ-போன்கள், 36 சாம்சங் போன்கள், 40 எம்ஐ போன்கள், 25 விஒ போன்கள், 15 ஓப்போ மற்றும் 10 நோக்கியோ போன்கள் என மொத்தமாக 211 ஸ்மார்ட் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.60 லட்சம் இருக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.