மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வரும் பயங்கரவாதிகளின் தாக்குதலை குறைக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
10 ஆண்டுகளில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 21% குறைந்துள்ளது - மத்தியஅமைச்சர் - பயங்கரவாதிகள் தாக்குதல்
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் பகுதியில் 2009ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 23 ஆயிரத்தில் இருந்து 3.187ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி மக்களவையில் தெரிவித்துள்ளார்.
union minister kishan reddy
அதற்கு மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளிக்கையில், 2009ஆம் ஆண்டிற்கு முன்பு ஜம்மு பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் 70 விழுக்காடாக இருந்தது. ஆனால் தற்போது 21 விழுக்காடாக குறைத்துள்ளோம். அதாவது 23.290ஆக இருந்த தாக்குதல் சம்பவம் 3.187ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.