கொரோனா என்ற வார்த்தை உலகளவில் மக்கள் மனிதில் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது அடுத்த நிறுத்தமாக இந்தியாவில் கால் பதித்துள்ளது. சமீபத்தில் இத்தாலியிலிருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
நேற்று இத்தாலியிலிருந்து வந்த மூன்று இந்தியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களை டெல்லி சாவ்லாவில் உள்ள ஒரு ஐடிபிபி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கொரோனாவின் தாக்கத்தால் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் இரண்டு பள்ளிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்திவருகிறார்.