சீனாவில் பரவி உலகையே மிரட்டி வரும் கொவிட்-19 (கொரோனா) வைரஸ் , தற்போது இந்தியாவில் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. உலகளவில் அச்சுறுத்தி வரும் இந்நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தானுக்குச் சுற்றுலா வந்த இத்தாலி நாட்டு தம்பதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட சூழலில், டெல்லிக்குச் சுற்றுலா வந்திருந்த 21 இத்தாலியர்கள் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் (ITBP) உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் இருந்த மூன்று இந்தியர்களும் மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.