கரோனா வைரஸ் நோய் இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதுவரை 14,378 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 480 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், இந்திய கடற்படையைச் சேர்ந்த 21 வீரர்கள் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
21 கடற்படை வீரர்களுக்கு கரோனா பாதிப்பு - 21-indian-navy-men-test-coronavirus-positive
மும்பை: கடற்படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Corona
இதுகுறித்து கடற்படை வெளியிட்ட அறிக்கையில், "மும்பையை மையமாகக் கொண்ட மேற்கு நேவல் கமாண்ட்டின் 21 வீரர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 20 பேர் மாலுமிகள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ளுதல்: சார்க் நாடுகளுக்கு இந்தியா பயிற்சி