தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

21 நாட்கள் லாக்டவுன்; இந்தியா கடந்து வந்த பாதை

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை அறிவித்த 21 நாட்கள் லாக்டவுனில் இந்தியா கடந்துவந்த பாதையை பார்க்கலாம்...

Modi
Modi

By

Published : Apr 16, 2020, 10:48 AM IST

  • மார்ச் 24 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை 471 - நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு என மோடி அறிவிப்பு
  • மார்ச் 25 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை 519 - நாட்டின் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. நாடுமுழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் செய்யப்படும் எனவும் அறிவிப்பு.
  • மார்ச் 26 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 606 -13.62 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் நிதி உயர்த்தப்பட்டது.
  • மார்ச் 27 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 694 - ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள 20.4 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500 அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்க உத்தரவு.
  • மார்ச் 28 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 724 - முதியோர், கைம்பெண், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை அறிவிப்பு.
  • மார்ச் 29 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 909 - கிசான் யோஜ்னா திட்டத்தின் கீழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை அறிவிப்பு.
  • மார்ச் 30 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை 979 - வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு 3 மாதம் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க உத்தரவு.
  • மார்ச் 31 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 1071 - 100 பேருக்கு குறைவாக வேலை செய்யும் நிறுவனத்தில் மாதம் ரூ.15,000க்கும் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்களின் பி.எப் தொகையை மூன்று மாதத்திற்கு அரசே செலுத்தும்.
  • ஏப்ரல் 1 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 1618 - 3.5 கோடி கட்டட தொழிலாளர்கள் நலன் பெறும் வகையில் தொழிலாளர் நிதிகளை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி.
  • ஏப்ரல் 2 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 2,006 - ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 விழுக்காடு குறைத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
  • ஏப்ரல் 3 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 2,521 - வங்கிகளில் வாங்கிய கடன் தொகைக்கான வட்டியை செலுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும்.
  • ஏப்ரல் 4 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 2,653 - பணப்புழக்கம் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் ரூ.3.74 லட்சம் கோடி செலுத்தப்படும்.
  • ஏப்ரல் 5 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 2,904 - கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 40 ஆயிரம் வென்டிலேட்டர் கருவிகள் புதிதாக தயாரிக்க ஏற்பாடு.
  • ஏப்ரல் 6 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 3,577 - கரோனா பாதிப்பு உதவித் தொகைக்காக PM CARES FUND சிறப்பு நிதி உதவித்திட்டம் தொடக்கம்.
  • ஏப்ரல் 7 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 4,281 - கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விழிப்புணர்வு ஆகியவை நாட்டின் குடிமக்களுக்கு சென்று சேர ஆரோக்கிய சேது என செயலி அறிமுகம்.
  • ஏப்ரல் 8 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 4,789 - கரோனா பாதிப்பை கையாள மாநில அரசுகளுக்கு ரூ.11,000 கோடி பேரிடர் நிவரண நிதியிலிருந்து ஒதுக்கீடு.
  • ஏப்ரல் 9 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 5,194 - மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்க ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
  • ஏப்ரல் 10 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 5,868 - சுமார் 8.20 லட்சம் அமைப்புசார தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
  • ஏப்ரல் 11 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 6,761 - ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 50 கோடி பயனாளர்களுக்கு இலவச கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க உத்தரவு.
  • ஏப்ரல் 12 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 7,529 - அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு சம்பளத்தில் 30 விழுக்காடு தொகை குறைப்பு.
  • ஏப்ரல் 13 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 8,447 - வருமான வரித்துறை திரும்பத் தர வேண்டி நிலுவைத் தொகையான ரூ.18,000 கோடி உடனடியாக விடுவிப்பு.
  • ஏப்ரல் 14 - இந்தியாவின் கரோனா எண்ணிக்கை - 9,352 - அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பு சிறப்பு நிதித்தொகையாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.

குறிப்பு: மேற்காண்ட அறிவிப்பு, நடவடிக்கைகளுக்கு தேதிகளுக்கும் தொடர்பு இல்லை

ABOUT THE AUTHOR

...view details