ஜம்மு காஷ்மீர் எல்லையில் 2019ஆம் ஆண்டு மூன்றாயிரத்து 289 முறை பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் ஆயிரத்து 565 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
அந்தவகையில் அக்டோபர் 398, நவம்பர் 333, ஆகஸ்ட் 323, ஜூலை 314, செப்டம்பர் 308, மார்ச் மாதத்தில் 275 தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018ஆம் ஆண்டு 2,936 தடவை பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது.
2017ஆம் ஆண்டு 971 முறை தாக்குதல் நடத்தியது. 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். அதில் 12 பேர் பொதுமக்கள், 19 பேர் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள்.