தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உணவு வழங்கும் மையங்கள் அமைக்கும் டெல்லி அரசு! - கரோனா வைரஸ்

டெல்லி: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவளிக்கும் நோக்கில் 2,500 உணவு வழங்கும் மையங்களை அமைக்கவுள்ளதாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் தெரிவித்துள்ளார்.

20000-quarantined-homes-under-watch-2500-food-distribution-centres-to-be-established-in-delhi-lg-anil-baijal
20000-quarantined-homes-under-watch-2500-food-distribution-centres-to-be-established-in-delhi-lg-anil-baijal

By

Published : Mar 31, 2020, 2:41 PM IST

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனிடையே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விளிம்பு நிலை மனிதர்கள் பலரும் உணவுக்கு தவித்துவருகின்றனர்.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87ஆக உள்ளது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைமை செயலர், துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆகியோர் வீடியோ கான்ஃப்ரசிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அனில் பய்ஜால் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். இதற்காக டெல்லியில் 500 உணவளிக்கும் மையங்களில் உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்த மையங்களைத் தற்போது 2,500 ஆக உயர்த்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட 20 ஆயிரம் வீடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் வெளியே வராமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இவையும் மீறி வெளியில் வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:”பீகாரில் இறந்த தாய்; டெல்லியில் தவிக்கும் மகன்” அரசு உதவுமா?

ABOUT THE AUTHOR

...view details