இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஊரடங்கு உத்தரவை புதுச்சேரியில் கடுமைப்படுத்தியுள்ளோம். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை எடுத்துச்செல்ல எந்தத் தடையும் இல்லை. மேலும், கட்டட தொழிலாளர்கள் குடும்ப அட்டைக்கு இரண்டாயிரம் ரூபாயும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஊரடங்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு உதவ வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்க அரிசி கொடுத்தால் மட்டும் போதாது நிதி வழங்க வேண்டும்.