தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமானங்கள் தடையால் மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்

கோவிட்-19 வைரஸ் எதிரொலியால் மலேசியாவில் இருக்கும் இந்திய மாணவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.

MALAYSIA
MALAYSIA

By

Published : Mar 18, 2020, 12:06 PM IST

கோவிட் -19 கரோனா பெருந்தொற்று உலகளவில் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசை கட்டுப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து விமானங்கள் இந்தியாவிற்குள் வர இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

குறிப்பாக, மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவுக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு படிக்கும் 350 மாணவர்கள் இந்தியா வரமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களாவர்.

நேற்று காலை விமான நிலையங்களுக்கு வந்த மாணவர்கள் நள்ளிரவு வரை விமானங்களின்றி அவதியுற்றனர். இந்நிலையில், கோலாலம்பூரிலிருந்து டெல்லி, விசாகப்பட்டினம் வரை ஏர் ஏசியா விமானங்கள் இயக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார்.

மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்

இதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டில் கரோனா பீதியை அடுத்து அங்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மருத்துவம் படிக்கும் கேரளா மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு அங்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா முன்னேற்பாடுகள் குறித்து மத்திய அரசுக்கு கார்த்தி சிதம்பரம் பாராட்டு

ABOUT THE AUTHOR

...view details