தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களின் வரி 200% உயர்வு - வியாபாரிகள் வேதனை - இறக்குமதி வரி

கொல்கத்தா: இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களின் வரி 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து, இறக்குமதியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

import duty hike
import duty hike

By

Published : Feb 9, 2020, 5:04 PM IST

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றில் 75 விழுக்காடு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் சுமார் 130 கோடி மதிப்புள்ள பொருள்கள், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களுக்கு 20 முதல் 60 விழுக்காடு வரை இறக்குமதி வரி விதிக்கவுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளூரில் விளையாட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு தொழிலாளர்கள் லாபமடைவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேற்கு வங்க எக்சிம் சங்கத்தின் ( விளையாட்டுப் பொருள்கள் வர்த்தக சங்கம்) இணைச் செயலர் மோஹித் பாந்தியா கூறுகையில், "இதற்கு முன் விதிக்கப்பட்ட வரியே தொடர வேண்டும். இந்த கூடுதல் வரி விதிப்பைக் கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம்.

200 விழுக்காடு வரி விதிப்பு என்பது மிகவும் அதிகமான ஒன்று. இந்த விலையேற்றத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

மேலும், இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தவுள்ளதாகவும் மோஹித் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு!

ABOUT THE AUTHOR

...view details