டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் ஜமாத் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து பலர் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.
இதனையடுத்து இதில் பங்கேற்ற தெலங்கானைவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் 50 பேர், ஆந்திரப் பிரதேசத்தில் 40 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.