உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணின் (20) வீட்டிற்குள் புகுந்து, பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கவே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, வன்புணர்வு செய்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் தந்தை சர்தாவல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது! - இளம்பெண் வன்புணர்வு
முசாபர் நகர்: துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண்ணை வன்புணர்வு செய்தவர் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்த காமக் கொடூரன் கைது!
இது குறித்து காவல் ஆய்வாளர் சுபி சிங், “தற்போது அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இளம்பெண் தனியாக இருந்ததை அறிந்து கொண்டு பக்கது வீட்டுக்காரர் உள்ளே நுழைந்திருகிறார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: பாலியல் இச்சைக்கு இசைந்துகொடுக்காத பெண்ணை கொன்றவர் கைது!