தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிவர் புயல்: காரைக்காலுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை! - 20 people disaster rescue team at karaikal

காரைக்கால்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் மீட்பு குழுவினர் காரைக்காலுக்கு வருகை தந்துள்ளனர்.

நிவர்
நிவர்

By

Published : Nov 24, 2020, 1:36 PM IST

நிவர் புயல் காரைக்கால், மாமல்லபுரத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் குழு ஆய்வாளர்கள் யோகேஷ்வாம்னாகர், மோகனரங்கம் தலைமையில் 20 பேர்கள் அடங்கிய குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

பொதுமக்கள் உறுதிமொழி விழிப்புணர்வு

இவர்கள் முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து காரைக்காலில் உள்ள மீனவ கிராமங்களில் கரோனா மற்றும் நிவர் புயலில் இருந்து தற்காத்துக் கொள்ளும்படி பொதுமக்களிடையே உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், புயல் நேரங்களில் மரம் விழுந்தாலோ அல்லது வேறு ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ அதனை அப்புறப்படுத்துவதற்கு அனைத்து கருவிகளும் மீட்பு குழுவிடம் தயாராக உள்ளதாக மீட்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details