நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 30 நாள்களாக வீட்டிலேயே முடங்கி இருப்பதால் கரோனா குறித்த அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துவருகிறது.
கரோனா அறிகுறி உள்ளவர்களைக்கூட தங்களது பகுதிகளில் தனிமைப்படுத்த அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தும் மக்களின் எண்ணிக்கையும் இதுபோன்ற செய்திகளும் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் அலிபுர்தார் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் உடலை அரசு அலுவலர்கள், ரகசியமாக அப்புறப்படுத்துவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்தவரை தகனம் செய்ய தீஸ்டா ஆற்றங்கரை சென்ற அலுவலர்களை ஒரு கும்பல் சுற்றிவளைத்தது.