கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் உமாதேவி என்ற பெண் யானையின் பாதுகாவலராக உள்ளார். இவருக்கு இரண்டு வயதில் பாமா என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில், சிறுமியும் உமாதேவி என்கிற பெண் யானையும், அப்பகுதியில் சுற்றித்திரிவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறுமி புன்சிரிப்பில் யானையுடன் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து மகேஷ் கூறுகையில், "பாமா பிறந்து 6 மாதங்களிலேயே உமாதேவியுடன் நட்பாக பழகத் தொடங்கினாள். தற்போது பாமாவிற்கும் உமாதேவிக்கும் இடையிலேயே ஒரு இணைபிரியாத பந்தம் ஒன்று உருவாகியுள்ளது. என் மகள் பின்னால், ஒரு தோழியைப் போலவே உமாதேவி நடந்து செல்கிறாள். பாமாவைத் தொடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள். அவளின் பாதுகாவலராக தற்போது உமாதேவி மாறியுள்ளார்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
யானையை நண்பனாய் பார்க்கும் இந்தக் கடவுளின் தேசத்தில் தான், இரண்டு நாட்களுக்கு முன்பு அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்கு உணவு கொடுத்த சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.