ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (25). நேற்று செகந்திராபாத் தொடர்வண்டி நிலையத்தில் நெல்லூர் செல்வதற்காக மாலை நேரம் வந்துள்ளார். அப்போது அவருடன், மகன் பிரபாஸ் (5), மகள் சுவர்ணலதா (2) ஆகியோர் உடனிருந்தனர். அச்சமயத்தில், தொடர்வண்டி வர நேரம் அதிகமிருந்ததால் சிறிது நேரம்,தொடர்வண்டி நிலைய மின்தூக்கியின் அருகே சற்று கண் அயர்ந்துள்ளார் சுரேஷ்.
ஆந்திர அரசியலில் பரபரப்பு: சிரஞ்சீவி, ஜெகன் மோகன் ரெட்டி சந்திப்பு
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்துப் பார்த்தபோது தன் குழந்தை சுவர்ணலதா காணாமல்போனதைக் கண்டு அதிர்ந்துள்ளார். துரிதமாகச் செயல்பட்டு ரயில்வே காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார் சுரேஷ். நகர காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரு காவல் பிரிவினரும் சேர்ந்து குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
குழந்தை கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கண்காணிப்புப் படக்கருவிகளை ஆய்வுசெய்த காவல் துறையினர், குழந்தையை கடத்திச் சென்ற 25 வயது மதிக்கத்தக்க நபரை அடையாளம் கண்டனர். தொடர்ந்து நடத்திய தேடுதலில், நுழைவு வாயில் எண் 5 வழியாக, கடத்தல்காரர் வெளியேறினார் என்பது உறுதியானது.அதனைத் தொடர்ந்து சென்ற காவல் துறையினர், குழந்தையைத் தொடர்வண்டி நிலையம் அருகில் கண்டுபிடித்தனர். கடத்திய நபர் யார் என்பது குறித்து அறிய விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.