ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்னேயில் நேற்று(செப்.25) பெய்த மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் இரண்டு பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மாயமான மூவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மாநிலத்திற்காக விளையாடிய கிரிக்கெட் வீராங்கனைகளான ரசியா அகமது, உள்ளூர் வீராங்கனை ஃபெரோசியா கான் ஆகியோரின் உடல்கள் குப்பைகளிலிருந்து மீட்கப்பட்டதாக, மவ்னே வட்டாரத்தின் தலைவர் ஹெட்மேன் பஹ் பட் தெரிவித்தார். நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக, கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில்வெஸ்டர் நோங்டிங்கர் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடும் பேரிடர் மீட்புப் படையினர்! உயிரிழந்த ரசியா, கடந்த 2011-12 முதல் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, மாநிலத்தை பிரதிநிதிப்படுத்தியதாக மேகாலயா கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிதியோன் கார்கொங்கோர் தெரிவித்தார். இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த அவரது மரணத்திற்கு மற்ற வீரர்கள், வீராங்கனைகள் இரங்கல் தெரிவித்தனர். "நாங்கள் ரசியாவை இழப்போம், அவரது ஆத்மாவுக்கு நித்திய ஓய்வு கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று பெண் கிரிக்கெட் வீராங்கனை ககோலி சக்ரவர்த்தி கூறினார்.
இதற்கிடையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர் கூறுகையில், திங்கள்கிழமை முதல் இடைவிடாத மழை, மாநிலம் முழுவதும் பெய்ததே இப்பேரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், குப்பைகளை அகற்ற பி.டபிள்யூ.டி தொழிலாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், மேற்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் ரியாங்க்டோ-பாமில் சாலையின் ஒரு பகுதி, மவ்ஷின்ருட்-தாய்ம், மவ்ஷின்ருட்-ஹஹீம் சாலை ஆகியவை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை திறந்து வைக்கவுள்ள மோடி!