தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் கைது! - இரண்டு பயங்கரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டின்போது காஷ்மீர் காவல் துறையினரால் இரண்டு பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.

2-terrorists-killed-in-encounter-in-jammu-and-kashmirs-sopore
2-terrorists-killed-in-encounter-in-jammu-and-kashmirs-sopore

By

Published : Jun 25, 2020, 10:40 AM IST

Updated : Jun 25, 2020, 10:47 AM IST

காஷ்மீர் காவல் துறையினர் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளைக் கைது செய்ததாகத் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய அவர்கள், "காஷ்மீரின் தெற்குப் பகுதியான பாரமுல்லா மாவட்டம் சோபேர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டோம்.

அப்போது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தியதால் இருவருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதையடுத்து, இரண்டு பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்" எனக் கூறினர்.

முன்னதாக, ஜூன் 23ஆம் தேதி புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இருவர் உயரிழந்தனர்.

இதில் பாதுகாப்புப் படையினர் சிலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த எட்டு பேரை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Last Updated : Jun 25, 2020, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details