வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹந்த்வாரா காவல் துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை மடக்கிப்பிடிக்க காவல் துறையினர் முயற்சித்தனர்.
ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர், இருப்பினும் திறம்படச் செயல்பட்ட காவல் துறையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று பிடித்தனர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களின் பெயர் லியாகத் அகமது மீர், ஆகிப் ரஷித் மீர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் வேலை செய்துவருவதாகவும் காஷ்மீரில் ஆயுதங்களை விநியோகித்துவருவதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.