உத்தரப் பிரதேசம் மாநிலம் மவு மாவட்டத்தில் உள்ள 9, 10 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்த இரண்டு சிறுமிகளும் சகோதரிகளாவர்.
இரண்டு இளைஞர்கள் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பலமுறை அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தங்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமையினை அச்சிறுமிகளின் மூத்த சகோதரியிடம் அவர்கள் கூறினர்.