உத்தரபிரதேசம் மாநிலம், மாவ் மாவட்டத்தில் ஒன்பது, பத்து வயதுள்ள இரண்டு சிறுமிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த இருவர் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அக்கா- தங்கைகளான இருவரும் தங்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்து, தங்களின் மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமிகளின் உறவினர், குற்றாவாளிகள் இருவர் மீதும் காவல்நிலைத்தில் புகார் அளித்தார்.
சிறுமிகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த ஒருவர் கைது! - உத்தரபிரதேசம் மாநிலம்
லக்னோ: இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த இருவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
2-sisters-raped
அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் இருவரில் ஒருவரை கைது செய்தனர். தலைமறைவாகிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர். சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவருக்கு தூக்கு!