ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது எஸ்.ஏ.பி ஐடி நிறுவனம். இந்நிறுனத்தின் கிளைகள் பெங்களூரு, குர்கான், மும்பை ஆகியப் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், எஸ்.ஏ.பி நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் 2 ஊழியர்களுக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்.ஏ.பியின் அனைத்து கிளைகளையும் தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து எஸ்.ஏ.பி வெளியிட்டுள்ள் அறிக்கையில், " நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஊழியர்கள் யாருக்காவது இந்த நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். முறையான அறிவிப்பு வரும் வரை, அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேணடும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.