இதுகுறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயன்ற போது இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீர், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை! - ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறல்
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
![ஜம்மு காஷ்மீர், பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை! 2-pakistani-terrorists-killed-as-army-foils-infiltration-bid-along-loc](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:42:02:1595995922-8211707-880-8211707-1595985843444.jpg)
2-pakistani-terrorists-killed-as-army-foils-infiltration-bid-along-loc
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தனர்.
இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், மற்றொருவர் காயமடைந்தார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை” என்றார்.
மேலும், “பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த முழுப்பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடல்கள் நடந்து வருகின்றது” என்றும் தெரிவித்தார்.