ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அம்மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள சைமோவில், பிரிவினைவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்ததாகவும், அதில் இந்த இரண்டு பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.