உ.பி.யில் சாலை விபத்து; புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்து
12:11 May 22
லக்னோ: புலந்த்ஷரில் ஏற்பட்ட சரக்கு வாகன விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷரில் உள்ள டெல்லி-படான் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிஜ்னோர் மாவட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். கடந்த சில வாரங்களாக உ.பி.யில் புலம்பெயந்த தொழிலாளர்கள் வாகன விபத்துக்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தெலங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு!