தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமூக வலைத்தளத்தில் நடிகர் சல்மான் கானை மிரட்டியவர்கள் கைது! - ஃபேஸ்புக்

ஜெய்ப்பூர்: கடந்த மாதம் கமூக வலைத்தளத்தில் நடிகர் சல்மான் கானை மிரட்டிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

salman khan

By

Published : Oct 3, 2019, 11:03 PM IST

கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் ஜாக்கி பிஷ்னோய், ஜெகதீஷ் ஆகிய இருவரும் நடிகர் சல்மான் கானை அச்சுறுத்தும் வகையில் பதிவிட்டனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சமூக வலைத்தளத்தில் அவர்களின் பெயரோடு லாரன்ஸ் என்ற பெயர் சேர்த்து வைத்ததால், அவர்கள் ஜோத்பூரை சேர்ந்த லாரன்ஸ் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சொகுசு காரில் வந்த இருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர். அப்போது அந்த சொகுசு கார் திருடப்பட்டது என தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த மாதம் சல்மான் கானை சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தியதும் இவர்கள் என தெரிய வந்ததையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சல்மான் கான் இந்த கும்பலுக்கு பயந்துதான் மான் வேட்டைக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் ஆஜராகவில்லை.

ABOUT THE AUTHOR

...view details