தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் கடத்தல் - 2 வெளிநாட்டவர் கைது - வெளிநாட்டுப் பயண்ம் கடத்தல் டெல்லியில் இருவர் கைது

டெல்லி : 1.67 லட்சம் அமெரிக்க டாலர்களை கடத்தி வந்த இரண்டு கிரிகிஸ்தான் நாட்டு பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

kyrgyz nationals held in delhi
kyrgyz nationals held in delhi

By

Published : Mar 9, 2020, 9:04 PM IST

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சந்தேகப்படும்படியாக இரண்டு வெளிநாட்டவர் வெளியே வருவதை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டனர்.

இதையடுத்து, அவர்களை வழி மறுத்து உடமைகளைச் சோதனையிட்டதில், சரியான ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 150 அமெரிக்க டாலர் பணம் எடுத்தவரப்பட்டது தெரியவந்தது.

அப்பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், அந்த வெளிநாட்டவர்களை கைது செய்து சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள் கிரிஸ்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாட்கெரிமாவ், ஒராஸ்பாய்வ் ருஸ்லான் என்பது தெரியவந்தது. வெளிநாட்டு பணம் கடத்தல் குறித்து அவர்களிடம் சுங்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : கொரோனா பீதி : டெல்லி மெட்ரோ தூய்மைப் படுத்தும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details