பாகிஸ்தான், கராச்சி குல்பஹரில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், கட்டடங்களுக்கிடையே சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் பலத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 மாடிக்கட்டடம் இடிந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு! - குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து
கராச்சி: ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடம்
இதையடுத்து, சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கராச்சி காவல் ஆணையருக்கு மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப்பில் விஸ்வரூபம் எடுக்கும் போதைப் பொருள் விவகாரம்