தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானாவில் டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் காயம் ! - டிராக்டர் மோதி தாக்கி விபத்து

சாலையில் நின்று கொண்டிருந்த இருவர் மீது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த டிராக்டர் மாேதி விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

tractor accident
tractor accident

By

Published : Oct 27, 2020, 4:50 AM IST

சர்கி தாத்ரி(ஹரியானா): இங்குள்ள மகேந்திரகர் ரவுண்டானாவில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது, டிராக்டர் ஒன்று மோதி தாக்கியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு பேரும் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக ஓடிய டிராக்டர், சாலையின் அருகே நின்று கொண்டிருந்த இருவரை தாக்கியது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

விபத்து ஏற்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

டிராக்டர் மாேதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சி

விபத்தில் தீவிரமாக காயமடைந்த நபர், காக்கா சிங் என்பதும். ஏழையான இவர், சிறிய பொருட்களை விற்று வருமானம் ஈட்டுவார் என்பதும் தெரிய வந்தது. மேலும் சிகிச்சைக்காக இவர், பி.ஜி.ஐ.எம்.எஸ், ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என காவல்துறாய தெரிவித்தனர்.

இதையும் படிங்க :திருமாவளவன் பேசுவதை முழுமையாக கேட்டுவிட்டு நடவடிக்கை எடுங்கள் - புதுச்சேரி முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details