தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் - under-construction foot overbridge collapses in Mumbai

மகாராஷ்டிரா: மும்பையை அடுத்துள்ள மன்கூர்ட் பகுதியில் நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

2 injured after under-construction foot overbridge collapses in Mumbai
மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் !

By

Published : Jan 30, 2020, 10:38 AM IST

மன்கூர்ட் பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக நடைமேம்பாலத்தின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் இருவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம்

இது தொடர்பாக பன்டலிக் கெய்குடே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இதையும் படிங்க : சிஏஏ போராட்டத்தில் சர்ச்சை பேச்சு; உ.பி. மருத்துவர் கைது

ABOUT THE AUTHOR

...view details