தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேலைவாய்ப்பு குறித்த அவநம்பிக்கையில் 40% இந்தியர்கள் - ஆய்வு தகவல்

டெல்லி: கரோனா லாக்டவுன் தாக்கத்தின் எதிரொலியாக கடும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 40 விழுக்காடு இந்தியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு குறித்து அவநம்பிக்கையில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

Indian professionals
Indian professionals

By

Published : Jun 16, 2020, 4:09 PM IST

கரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டு இரண்டு வார காலம் தாண்டியுள்ள நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பு தொடர்பாக லிங்க்ட் இன் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதில், நாட்டின் வேலைவாய்ப்பு சூழல் குறித்து அதிகளவிலான இந்தியர்கள் அவநம்பிக்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், பெருநிறுவன சேவைகள், உற்பத்தித் துறை ஆகிய முன்னணி துறைகளில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. அதில், சுகாதாரத்துறையில் 52 விழுக்காடு, பெருநிறுவன சேவைகள் 48 விழுக்காடு, உற்பத்தி துறை 41 விழுக்காடு என மூன்று துறைகளும் வேலையிழப்பைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழல் சீரடைய குறைந்தது ஒரு வருட காலம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தில் இரண்டு இந்தியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு குறித்து அவநம்பிக்கையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’25% பங்குகள் விற்பனை' - இலக்கை நோக்கி நகரும் ஜியோ

ABOUT THE AUTHOR

...view details