பிகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
பிகார் தேர்தல்: இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம்! - பிகாரில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
பாட்னா: பிகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், அப்பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு, அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் வெடிகுண்டுகள் உள்ளதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்திய காவல் துறையினர், ஒரு கல்வெட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடிகுண்டுகளை நிபுணர்கள் உதவியுடன் சரியான நேரத்தில் செயலிழக்க செய்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. தேர்தலில் வன்முறை ஏற்படுத்த மாவோயிஸ்ட் சதி செயலாக இருக்கும் என காவல் துறையினர் கருதுகின்றனர்.
முன்னதாக, கயா மாவட்டத்தின் இமாம்கஞ்ச் பகுதியில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த இரண்டு வெடிகுண்டகளும் மீட்கப்பட்டன. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.