புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த குணவேல் என்பவர் தனது மகன் கனிஷ்கர் உடன் பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றார்.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் - மீனவர்கள் மாயம்
புதுச்சேரி: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகினர்.
2 மீனவர்கள் மாயம்
அப்போது அவர்கள் சென்ற பைபர் படகு எதிர்பாராத விதமாக முகத்துவாரத்தில் கவிழ்ந்தது. இதில் குணவேல் அவரது மகன் கனிஷ்கர் ஆகிய இருவரும் கடலில் முழ்கி மாயமாகினர். இதனையடுத்து இருவரையும் சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 26 மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு