தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரயில்வேயில் 2.87 லட்சம் நிரப்பப்படாத பணியிடங்கள்: பியூஷ் கோயல்

டெல்லி: ரயில்வே துறையில் 2.87 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதென ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்தார்.

ரயில்வேயில் 2.87 லட்சம் நிரப்படாத பணியிடங்கள்
ரயில்வேயில் 2.87 லட்சம் நிரப்படாத பணியிடங்கள்

By

Published : Mar 14, 2020, 4:57 PM IST

ரயில்வே துறையில் இருக்கும் வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்கு, மக்களவையில் அமைச்சர் பியூஷ் கோயல் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர், 2018ஆம் ஆண்டு மத்திய அமைச்சகம், 1 லட்சத்து 41 ஆயிரம் பணியிடங்களுக்கு, மையப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிக்கைகளை வெளியிட்டது. வேலைக்கு ஆள் சேர்ப்பதும் அதுபோலவே செயல்பட்டது. 2019ஆம் ஆண்டில் மற்றுமொரு மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், 1 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு, குரூப் சி, லெவல்-1 பணியிடங்களுக்கான மையப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன. இதனை நிரப்பும் பணியில் முதல் நிலை முடிந்து இன்னும் மூன்று நிலைகள் மீதமுள்ளன.

இதற்கிடையில், ஒப்பந்த ஊழியதாரர்கள் தேவைக்கு ஏற்ப பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுகுறித்த விவரங்கள் முழுமையாக மத்திய அரசால் சேகரிக்கப்படவில்லை, எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி உச்ச நீதிமன்றத்தில் கடும் கட்டுப்பாடுகள்

ABOUT THE AUTHOR

...view details