தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூரு சுங்கத்துறை அலுவலர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு - கெம்ப்ப கவுடா பன்னாட்டு விமான நிலையம்

பறிமுதல் செய்யப்பட்ட 2.5 கிலோ தங்கம் மாயமானதைத் தொடர்ந்து கெம்ப்ப கவுடா பன்னாட்டு விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

2.5 kg gold lost:  FIR filed against KIAL airport customs officers in Bangalore
2.5 kg gold lost: FIR filed against KIAL airport customs officers in Bangalore

By

Published : Oct 18, 2020, 1:27 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெம்ப்ப கவுடா பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டுவருகிறது. இங்கு சில நாள்களுக்கு முன்பு, பல பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்ட 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, குடோனில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தங்கம் தற்போது மாயமானது.

இதையடுத்து, சந்தேகமடைந்த சுங்க இணை ஆணையர் எம்.ஜே.சேட்டன், சுங்க உதவி ஆணையர் வினோத் சின்னப்பா, கேசவ், கண்காணிப்பாளர் என்.ஜே.ரவிசங்கர், டீன் ரெக்ஸ், கே.பிளிங்கராஜு, எஸ்.டி.ஹிரமாதா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு சிபிஐ பிரிவில் புகாரளித்தார்.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details