தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காட்டு காளான்களை சாப்பிட்டு இருவர் உயிரிழப்பு!

சில்லாங்: மேகாலயா மாநிலத்தில் இருவர் காட்டு காளான்களை சாப்பிட்டு உயிரிழந்தனர்.

காட்டு காளான்களை சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு
காட்டு காளான்களை சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு

By

Published : Apr 28, 2020, 1:14 PM IST

மேகாலயா மாநிலம் மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லமின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோரிசன் தார் (40), கட்டிலியா கோங்லா (26). இவர்கள் அப்பகுதியிலுள்ள மலைக்குச் சென்று அங்கிருந்த காளான்களை எடுத்து வந்தனர். அதனை இரண்டு குடும்பத்தினரும் சமைத்து சாப்பிட்டனர்.

இதையடுத்து, மோரிசன் தார் நோய்வாய்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக வேறொறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதேபோல், கட்டிலியாவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து இரண்டு குடும்பத்தினரைச் சேர்ந்த 16 பேரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையடுத்து அப்பகுதியிலுள்ள மலைப் பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:துபாயில் உயிரிழந்த கமலேஷ் பட்டின் உடல் நல்லடக்கம்

ABOUT THE AUTHOR

...view details