தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடகுக் கடையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை - புதுச்சேரி மாவட்டச் செய்திகள்

புதுச்சேரி: அடகுக் கடையில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு, காவலர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி அடகுக்கடையில் கொள்ளை  புதுச்சேரி மாவட்டச் செய்திகள்  2 crorers worth gold chains theft from pawn shop in pudhucherry
அடகுக்கடையில் இரண்டரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

By

Published : Jan 4, 2020, 7:24 AM IST

Updated : Jan 4, 2020, 7:33 PM IST

புதுச்சேரி திலாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ்குமார் ஜெயின். இவர் அதே பகுதியிலுள்ள அய்யனார் கோயில் வீதியில் அடகுக் கடை நடத்திவருகிறார். நேற்றிரவு 8 மணிக்கு வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற இவர், இன்று காலை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், அவர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரிலிருந்த தங்கம், வெள்ளி நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இக்கொள்ளைச் சம்பவம் குறித்து அடகுக் கடையின் உரிமையாளர், கோரிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

காவல் கண்காணிப்பளர் ராஜேஷ் அல்வால் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் காவலர்களிடம் சிக்காமல் இருப்பதற்கு, சிசிடிவியில் பதிவான காட்சிகளைச் சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்கை (Hard Disk) எடுத்துச் சென்றுள்ளனர்.

அடகுக்கடையில் இரண்டரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

இதனைத்தொடர்ந்து கொள்ளச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், அருகிலுள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு 2.5 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மர்மப் பொருள் வெடித்ததில் 16 சிறுவர்கள் படுகாயம்

Last Updated : Jan 4, 2020, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details