தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து உண்மை செய்திகளை மறைக்கும் பாஜக - ராகுல் குற்றச்சாட்டு!

டெல்லி : இரண்டு கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரம் தொலைத்து இருளில் மூழ்கியுள்ளனர் என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து உண்மை செய்திகளை மறைக்கும் பாஜக - ராகுல் குற்றச்சாட்டு!
பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து உண்மை செய்திகளை மறைக்கும் பாஜக - ராகுல் குற்றச்சாட்டு!

By

Published : Aug 19, 2020, 5:06 PM IST

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவர், "நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, ​​இந்தியாவின் 12 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். அவர் மக்களை கனவு காணச் செய்தார். ஆனால் அது விரைவில் தலைகீழாக மாறியது. இந்தியாவில் 14 கோடி பேருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக வேலையில்லாமல் போனது.

குறிப்பாக, கரோனா தொற்றுநோய் பரவத்தொடங்கிய கடந்த 4 மாதங்களில் சுமார் இரண்டு கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். இரண்டு கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருட்டில் உள்ளது. நீங்கள் வேலையின்மை பற்றிய உண்மையை நாட்டிலிருந்து மறைக்க முடியாது. பணமாக்குதல், ஜிஎஸ்டி வரி விதிப்பு, திட்டமிடப்படாத ஊரடங்கு என, இந்த மூன்று செயல்களின் மூலமாக இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை மத்திய அரசு அழித்தது.

இப்போது உண்மை என்னவென்றால், இந்திய அரசால் தனது சொந்த நாட்டின் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை அழுத்தங்கள் கொடுத்து, தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கின்றன.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் (WSJ) வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, மத்திய பாஜக அரசின் தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகளை, அவதூறுகளை, போலி செய்திகளையும் வெறுப்பையும் காட்டி நாட்டிலிருந்து பல உண்மைகளை மறைக்க முயல்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மையை மறைக்க அதிகாரப்பூர்வமான அழுத்தங்களை அளிக்கும் மத்திய அரசின் ஜனநாயக விரோத செயல்களை அனைத்து இந்தியர்களும் கேள்விக்குட்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களின் குரலாக ஒலிப்பதை நோக்கமாகக் கொண்டு, காங்கிரஸின் இளைஞர் பிரிவு 'வேலைவாய்ப்பை வழங்கு' என்ற பரப்புரையை, கடந்த 9 ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details